தேர்தலை நடாத்துவதற்கு நடவடிக்கை- பிரதமர்..!!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தி பழைய முறைமையின் கீழ் மாகாண சபை தேர்தலை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென பிரமதர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாதுக்கை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிற்கு நூறு வீதம் முழுமையாக மின்சாரம் தற்போது வழங்கப்படுகின்றது. வடக்கு கிழக்கிற்கு நீர் வழங்கினாம்.

இலங்கை முழுவதும் சுத்தமான குடி நீரை வழங்குவதே எமது அடுத்த இலக்காக உள்ளது.

இவ்வாறு பல அபிவிருத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.

எனினும் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் பழிவாங்கல் மாத்திரமே இடம்பெற்றதாகவும் பிரதமர் மஹிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Related posts