சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்ந்தும் பரிசீலனையில்

இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கு இடையில் கைச்சாத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்ந்தும் பரிசீலனையில் உள்ளது என்று உயர் நீதிமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) தெரிவிக்கப்பட்டது.

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு ஒன்று குறித்த ஒப்பந்தத்தை தற்போது மீளாய்வு செய்து வருவதாக சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் அறிவித்துள்ளது.

குறித்த ஒப்பந்தம் இலங்கையின் அரசியலமைப்பை மீறுவதாகக் கூறி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் நிலைமை காரணமாக மீளாய்வுப்பணிகள் தாமதமாகியுள்ளது என்றும் என்று சட்டமா அதிபர் இன்று அறிவித்துள்ளார்.

அதன்படி குறித்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணையை நவம்பர் 3 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் இலங்கை மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கிடையிலான இருதரப்பு சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts