சர்வதேச ரீதியில் அதிகரித்துச் செல்லும் கொரோனா ..!!

கொவிட்-19 காரணமாக இத்தாலியில் பலியானவர்களை விட அதிகமானோர் மெக்ஷிக்கோவில் உயிரிழந்துள்ளனர்.

மெக்ஷிக்கோவில் கொவிட்-19 காரணமாக 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

அங்கு நேற்றைய தினம் 276 உயிரிழப்புகள் பதிவாகியதோடு 4 ஆயிரத்து 482 பேருக்கு தொற்றுறுதியாகியிருந்தது.

இதற்கமைய மெக்ஷிக்கோவில் இதுவரையில் 2 லட்சத்து 99 ஆயிரத்து 700 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதோடு 35 ஆயிரத்து 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

எவ்வாறாயினும் மெக்ஷிக்கோவில் கொவிட்-19 தாக்கம் குறைவடைந்து வருவதாகவும் சில ஊடகங்கள் அதன் தாக்கம் அதிகமாக காணப்படுவதாக தகவல் வெளியிடுவதாகவும் அந்த நாட்டு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்தியாவில் இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் கொவிட்-19 தொற்றுறுதியான 28 ஆயிரத்து 701 பேர் இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த காலப்பகுதியில் 500 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

இதற்கமைய இந்தியாவில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 78 ஆயிரத்து 254 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 174 ஆக அதிகரித்துள்ளது.

மஹராஷ்ரா மாநிலத்திலேயே அதிகமானோருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதனையடுத்து தமிழகம், டெல்லி மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிகமானோருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

எவ்வாறாயினும் இந்தியாவில் கொவிட்-19 தொற்றுறுதியான 5 லட்சத்து 53 ஆயிரத்து 471 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.

சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 30 லட்சத்து 41 ஆயிரத்து 499 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் சர்வதேச ரீதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 71 ஆயிரத்து 659 ஆக அதிகரித்துள்ளது.

எவ்வாறாயினும் கொவிட்-19 தொற்றுறுதியான 75 லட்சத்து 85 ஆயிரத்து 92 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.

Related posts