ஸ்ரேப்ரினிகா படுகொலையின் 25ஆவது ஆண்டு நிறைவு நாள் ..!!

ஸ்ரேப்ரினிகா படுகொலையின் 25ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்வு, கொரோனா வைரஸ் (கொவிட்-19) அச்சுறுத்தல் காரணமாக, எளிமையாக நடத்தப்பட்டுள்ளது.

ஸ்ரேப்ரினிகாவில் நடைபெறும் நிகழ்வில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கை பொதுவாக பல்லாயிரக்கணக்கானவையாகும். ஆனால் நாட்டின் முடக்கநிலை கட்டுப்பாடுகள் காரணமாக இந்த ஆண்டு நிகழ்வு சிறியதாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்போது, அண்மையில் அடையாளம் காணப்பட்ட படுகொலையில் உயிரிழந்த ஏழு பேருக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது.

பால்கன் போரின் போது பாதுகாப்பான புகலிடமாக அறிவிக்கப்பட்ட ஒரு பகுதியை கைப்பற்றிய பின்னர் போஸ்னிய- செர்பிய படைகள் இந்த கொலைகளை மேற்கொண்டன.

ஸ்ரேப்ரினிகா படுகொலையில் 8,000க்கும் மேற்பட்ட போஸ்னிய முஸ்லீம் ஆண்கள் மற்றும் சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இது இரண்டாம் உலகப் போருக்கு பிறகு ஐரோப்பிய மண்ணில் இடம்பெற்ற மிகப்பெரிய படுகொலை என விபரிக்கப்படுகின்றது.

போஸ்னியாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால், 6,402பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 216பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts