மாலைதீவில் சிக்கித் தவித்த 185 இலங்கையர்கள் ..!!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாலைதீவில் சிக்கித் தவித்த 185 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

அவர்கள் அனைவரும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதனையடுத்து, அவர்களுக்கு விமான நிலையத்தில் வைத்து பி.சிஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, பரிசோதனை முடிவுகள் வரும் வரையில், விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் உள்ள ஹோட்டல்களில் அவர்களை தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts