பொலிஸார் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்..!!

வடக்கு பெல்பாஸ்ட் பகுதியில் நேற்று சனிக்கிழமையும் பொலிஸ் மீது இரண்டாவது தடவையாக பெட்ரோல் குண்டுகள் மற்றும் கற்கள் வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நியூ லோட்ஜ் குடியிருப்புகள் அருகே வடக்கு குயின் ஸ்ட்ரீட் பகுதியில் அதிகாரிகள் தாக்கப்பட்டனர் என்றும் வீதியின் நடுவில் பொருட்கள் தீயிட்டு எரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு முதல் வன்முறை சம்பவம் இடம்பெற்றுவரும் நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் இதன் விளைவுகளை சந்திப்பார்கள் என்றும் பொலிஸ் தலைமை அதிகாரி எச்சரித்துள்ளார்.

மேலும் இந்த பொறுப்பற்ற செயலில் ஈடுபட்ட இளைஞர்கள், அவரகளது பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் உங்கள் இளைஞர்கள் எங்கே இருக்கிறார்கள், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை தெரியப்படுத்த வேண்டும் என்றும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related posts