பெங்களூரில் 14 ஆம் திகதி தொடக்கம் முழு ஊரடங்கு அமுல்..!!

பெங்களூரில் எதிர்வரும் 14 ஆம் திகதி தொடக்கம் ஜுலை மாதம் 22 ஆம் திகதிவரை முழு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

குறித்த ஊரடங்கு 14 ஆம் திகதி இரவு 8 மணி தொடங்கி 22 ஆம் திகதி காலை 5 மணிவரை அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெங்களூர் நகர்ப்புற பகுதிகள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இந்த ஊரடங்கு கடைபிடிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

பெங்களூரில் மட்டும் 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள  அதேவேளை  கர்நாடகத்தில் மொத்தம் பாதிப்பு 36 ஆயிரத்தைக் கடந்துள்ளதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு காலத்தில் பால், மளிகை,  காய்கறி மருந்து போன்ற அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் எந்தவிதத் தளர்வுகளுமற்ற முழு ஊரடங்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts