பிரிட்டனின்எல்லைகள் முழுமையாக செயற்படுவதை உறுதிப்படுத்த ..!!

இந்த ஆண்டின் இறுதியில் ஐரோப்பிய ஒன்றிய சுங்க ஒன்றியத்திலிருந்து வெளியேற பிரித்தானியா தயாராகி வருவதால், உட்கட்டமைப்பை அதிகரிப்பதற்கும் பிரிட்டனின் எல்லையை பாதுகாக்கவும் அரசாங்கம் 705 மில்லியன் பவுண்ட்ஸ் நிதியை ஒதுக்கியுள்ளது.

மேலும் இந்த நடவடிக்கை பிரெக்ஸிற்க்கு பிந்தைய இங்கிலாந்து “வாய்ப்புகளை பயன்படுத்த” உதவும் என அமைச்சர் மைக்கேல் கோவ்தெரிவித்துள்ளார்.

இருப்பினும் பிரெக்ஸிற் மாற்ற காலம் முடிவடைவதற்கான தயார்நிலையில் தொடர்பாக அரசாங்கம் மனநிறைவு அடைந்துள்ளதாக தொழிற்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

குறித்த நிதியில் துறைமுக மற்றும் உள்நாட்டு உட்கட்டமைப்பை உருவாக்க 470 மில்லியனும் தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் மற்றும் பணியாளர்களுக்கு 235 மில்லியனும் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இது இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸின் வெளிப்புற எல்லைகளுடன் மட்டுமே தொடர்புடையது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு அயர்லாந்திற்கான குறிப்பிட்ட வழிகாட்டுதல்களையும் நடவடிக்கைகளையும் அரசாங்கம் எதிர்வரும் வாரங்களில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts