களு மல்லியின் சகோதரியின் வீட்டிலிருந்து..!!

சிறைச்சாலையில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கொஸ்கொட தாரகவுக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் கைப்பேசி மற்றும் கைக்குண்டு ஒன்றை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இவரது போதைப்பொருள் வலையமைப்பின் முக்கிய நபராக கருதப்படும் ரோஹன பிரதீப் எனப்படும் களு மல்லி என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் ஊடாக குறித்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஓபநாயக்க-முத்தெட்டுவ பிரதேசத்தில் களு மல்லியின் சகோதரியின் வீட்டு வளாகத்தில் குறித்த கைப்பேசியும் கைக்குண்டும் புதைக்கப்பட்டிருந்தது.

கடந்த 9 ஆம் திகதி இரவு மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக முல்லேரியா-மிஹிரி பிரதேசத்தில் வைத்து 3.230 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் களு மல்லி கைது செய்யப்பட்டிருந்தார்.

Related posts