போதைப்பொருள் வர்த்தகம் குறித்து தகவல் வழங்குமாறு ஜனாதிபதி..!!

கிராமப்புரங்களில் இடம்பெறும் போதைப்பொருள் வர்த்தகம் குறித்து தகவல் வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாத்தளை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் விஜயம் செய்த ஜனாதிபதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்வதற்கான மக்கள் சந்திப்புகளில் பங்கேற்றார்.

பொதுமக்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்களையும் மேற்கொண்ட ஜனாதிபதியிடம் நாட்டில் காணப்படும் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாவனையை ஒழிக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கிராமப்புரங்களிலிருந்து போதையை ஒழிக்க அங்கு இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பாக அறியத்தருமாறு ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அத்தோடு பொதுமக்கள் தாம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளையும் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர். குறிப்பாக வெங்காயம் இறக்குமதி செய்யப்படுவதால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக பெரிய வெங்காய பயிர்ச்செய்கையாளர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.

அதற்கு பதிலளித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , அறுவடை காலத்தில் வெங்காய இறக்குமதிக்கு தடை விதித்து, உள்ளு}ர் விவசாயிகளின் உற்பத்திக்கு உயர்ந்தபட்ச விலையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுமென குறிப்பிட்டார்.

இதேவேளை பொதுமக்கள் முன்வைத்த பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வை வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

Related posts