நிலச்சரிவுகளில் சிக்கி குறைந்தது 23பேர் உயிரிழப்பு

மேற்கு நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி, குறைந்தது 23பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் காத்மாண்டுவிலிருந்து வடமேற்கே 200 கி.மீ (125 மைல்) தொலைவில் உள்ள மியாக்டி மாவட்டத்தில் ஒன்பது பேர் உயிரிந்துள்ளனர். மற்றும் 30க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.

மேலும், அங்கு பல வீடுகள் அழிக்கப்பட்டன என்று மாவட்ட நிர்வாகி கயான் நாத் தக்கல் தெரிவித்தார். மேலும், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடுமென அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்தி 50 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

அண்டை மாவட்டமான காஸ்கி மாவட்டத்தில், ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக சுற்றுலா நகரமான போகாராவில அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தூர மேற்கு பகுதியில் உள்ள ஜாஜர்கோட் மாவட்டத்தில் மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts