கேரளாவில் 3 மாத இடைவெளியில் 66 சிறுவர்கள் தற்கொலை..!!

கேரளாவில் கடந்த மூன்று மாதங்களில் சுமார் 66 சிறுவர்கள் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 25 திகதி முதல் ஜுலை மாதம் 9 ஆம் திகதிவரை மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி 18 வயதிற்கும் கீழ் உள்ள சிறுவர்கள் இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன்,  ”குழந்தைகளிடம் பழகும்போது அவர்களின் குணநலன்கள் உணர்ந்து பெற்றோர்கள் உறவாட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மனரீதியாக அவர்களின்  எண்ணங்களை உணர்ந்து அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் மனதை துன்புறுத்தும் வகையிலும்  மனதிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகைகளிலும் நடந்து கொள்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை  பெண்களின் மனரீதியான பாதிப்புகளுக்கு கூடுதல் சிகிச்சைகளும்  அதற்கான வசதிகளும் மாநிலத்திற்கு தேவைப்படுவதாக தெரிவித்த அவர், குழந்தைகள் தற்கொலைகளை தடுக்க  மாநில தீயணைப்புத்துறை தலைவரும் ஐ.பி.எஸ்.  அதிகாரியான ஸ்ரீலேகா தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts