ஈரானில் உள்ள மேலும் சில மீனவர்களை மீட்குமாறு கோரிக்கை!

ஈரானில் சிக்கி உள்ள மேலும் 40 தமிழக மீனவர்களை தாய்நாட்டிற்கு அழைத்து வருமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பல்வேறு வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் ‘ஆபரேசன் சமுத்திர சேது’ திட்டத்தின் கீழ் தாய் நாட்டுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

அவ்வகையில் ஈரானில் சிக்கித் தவித்த தமிழகம் மற்றும் கேரள மீனவர்கள் 687 பேர் ‘ஐஎன்எஸ் ஜலஸ்வா’ கப்பல் மூலம் மீட்கப்பட்டனர்.

குறித்த கப்பல் கடந்த முதலாம் திகதி காலை தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்திருந்தது. இதன் தொடர்ச்சியாக ஈரானில் சிக்கியுள்ள மேலும் 40 இந்தியர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts