குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு..!!

நாட்டில் காணப்படும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வொன்று பெற்றுக்கொடுக்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பலகலே வாத்துவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்தே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும்

MCC உடன்படிக்கை தொடர்பில் அனுர குமார வெளியிட்ட விடயம்

ஜனாதிபதி எம்.சி.சி ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்றால் அது தொடர்பில் அமெரிக்க தூதுவருக்கு எழுத்து மூலம் அறிவிக்குமாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பிலியந்தலை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும்

கைதான அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்..!!

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் அதிகாரிகளுக்கு மரண தண்டணை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தால், அதை உடனடியாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். நாவல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும்

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபன அறிக்கை தொடர்பில் ..!!

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபன அறிக்கையானது எதிர்வரும் தினங்களில் வெளியிடப்படவுள்ளதாக அதன் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கண்டி-பாததும்பர பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும்

நிலச்சரிவுகளில் சிக்கி குறைந்தது 23பேர் உயிரிழப்பு

மேற்கு நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி, குறைந்தது 23பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைநகர் காத்மாண்டுவிலிருந்து வடமேற்கே 200 கி.மீ (125 மைல்) தொலைவில் உள்ள மியாக்டி மாவட்டத்தில் ஒன்பது பேர் உயிரிந்துள்ளனர். மற்றும் 30க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். மேலும், அங்கு பல வீடுகள் அழிக்கப்பட்டன என்று…

மேலும்

கூட்டமைப்பை 2ஆம் இடத்துக்குத் தள்ளி யாழில் சாதனை..!!

“ஆகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி அதிக ஆசங்களைக் கைப்பற்றி சாதனை படைக்கும்.”– இவ்வாறு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-“இம்முறை யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கிடையில்…

மேலும்

துப்பாக்கிச் சூட்டில் 6 பயங்கரவாதிகள் உயிரிழப்பு

அருணாச்சல பிரதேசத்தில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் 6 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர். அருணாச்சல பிரதேசம்  லாங்டிங் மாவட்டம் நிகினு கிராமத்தின் அருகே பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது வனப்பகுதிக்குள் குடிசை அமைத்து தங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு…

மேலும்

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் அலுவலகம் திறப்பு

மட்டக்களப்பு – தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் அலுவலகம் இன்று மட்டக்களப்பு அரசடியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளர் அருண்தம்பிமுத்து அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது. இதன் போது கருத்து தெரிவித்த வேட்பாளர் அருண்தம்பிமுத்து : மட்டக்களப்பு மக்கள் உணரவேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் அவர்கள் நான்…

மேலும்

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வாக்காளர் அட்டைகள் வீடுகளுக்கு விநியோகம்..!!

2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வீடுகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார். வாக்காளர் அட்டைகளை தபால் நிலையங்களில் கையளிக்கும் நடவடிக்கை இன்றும், நாளையும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளினூடாக, பிரதேச தபால் அதிகாரிகளிடம் வாக்காளர் அட்டைகள் ஒப்படைக்கப்படவுள்ளதாக பிரதி தபால்மா…

மேலும்

தமிழகத்தில் நாளை தளர்வுகள் இன்றிய ஊரடங்கு..!!

தமிழகம் முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தளர்வுகளற்ற ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது. தமிழக அரசின் அறிவிப்பின் படி நாளை வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அத்தியாவசிய பொருள் சேவைகளுக்கான அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பால் மற்றும் மருத்துவமனைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் தளர்வுகள் இன்றிய ஊரடங்கு நடவடிக்கைள் அமுல்படுத்தப்பட்டிருந்த…

மேலும்