வெளி மாவட்டத்தைச் சேர்ந்தோர் கிறவல் அகழ்வு நடவடிக்கைகள் ஈடுபட்டு வருவதற்கு தடை..!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை வட்டார வன பகுதியான புணாணை பிரதேசத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தோர் கிறவல் அகழ்வு நடவடிக்கைகள் ஈடுபட்டு வருவதாக வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தணிகாசலம் தெரிவித்தார்.

தமது அதிகார எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் மகாவலி பி வலய அதிகார சபையின் அனுமதி பத்திரத்தினை வைத்துத்துக் கொண்டு கிறவல் அகழ்வு பணி மற்றும் விற்பனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்தார்.

குறித்த கிறவல் அகழ்வு பணியினை தடுத்து நிறுத்தும் முகமாக வாழைச்சேனை பொலிசாரின் உதவியுடன் தமது வன அதிகாரிகள் அவ்விடத்திற்கு கள விஜயமொன்றினை மேற்கொண்டிருந்ததாக கூறினார்.

இதன்போது கனரக வாகனங்கள் சில கிறவல் ஏற்றிக் கொண்டிருந்ததை அவதானித்து அவர்கள் தன் வசம் வைத்திருந்த ஆவணங்களை பரிசோதனை செய்திருந்தனர்.

இதன்போது குறித்த பிரதேசம் மகாவலி அதிகார சபைக்குட்பட்ட பிரதேசமாக கணித்து கிறவல் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும்¸ குறித்த விடயம் தொடர்பாக நிர்வாக சிக்கல் உள்ளதால் இதனை தீர்க்க நீதிமன்ற அனுமதியினை பெறும் நடவடிக்கை உள்ளதாகவும் அதுவரை இப்பிரதேசத்தில் கிறவல் அகழ்வு பணியினை தற்காலிகமாக இடை நிறுத்துமாறு சம்பந்தப்பட்டோர்களை பணித்துள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன் தமது நிர்வாக சிக்கல் தொடர்பாக நீதிமன்றம் ஊடாக தீர்வை பெற்றுக் கொள்ள வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்யவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts