பிக்பாஸ் 4ல் தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னி? என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

ஒரேயொரு போட்டோ மூலம் புகழின் உச்சிக்கே சென்றவர் ரம்யா பாண்டியன், பெரும்பாலான ரசிகர்களின் கனவுக்கன்னி என்றுகூட இவரை குறிப்பிடலாம்.

டம்மி டப்பாசு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

அதன் பின்னர் ஜோக்கர், தற்போது சூர்யா தயாரிக்கும் படத்திலும் நடிக்கவிருகிறார்.

பாடங்கள் ஒரு புறம் இருக்க, இவர் ரசிகர்கள் மத்தியில் இந்த அளவிற்கு பிரபலமான காரணம் இவர் நடத்திய போட்டோ ஷூட் தான்.

இதன்பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவரை வேற லெவலுக்கு கொண்டு சென்றது.

இந்நிலையில் இன்ஸ்டாவில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார் ரம்யா பாண்டியன்.

அதில் பிக்பாஸ் சீசன் 4ல் கலந்துகொள்ளப் போகிறீர்களா? என கேட்க, தெரியவில்லை, இன்னும் பிக்பாஸ் நிகழ்ச்சி உரிமையாளர்கள் தரப்பிலிருந்து யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. அப்படித் தொடர்பு கொண்டால் தானே போக முடியும்” என பதிலளித்துள்ளார்.

ஓஹோ,… அப்போது தொடர்பு கொண்டால் பங்கேற்பது நிச்சயம் என ரசிகர்கள் ஒரே குஷியாக உள்ளனர்.

Related posts