சாத்தான் குளம் விவகாரம்..!!

சாத்தான் குளத்தில் தந்தை, மகன் கொலைசெய்யப்பட்ட விவகாரத்தினை இன்று (வெள்ளிக்கிழமை) முதல் சி.பி.ஐ விசாரிக்கவுள்ளது.

இதற்காக சி.பி.ஐ கூடுதல் எஸ்.பி சுக்லா தலையில் ஏழு பேர் கொண்ட தனிப்படை தமிழகம் வருகைத்தரவுள்ளதுடன்,  சி.பி.ஐயின் விசாரணைக்கு தேவையான முன்னாயத்த நடவடிக்கைகள், தேவையான உதவிகளை செய்வதற்கு தயாராகவுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சி.பி.சி.ஐ.டி. சேகரித்த ஆதாரங்கள், ஆவணங்களை சி.பி.ஐ.பயன்படுத்திக் கொள்ளலாம். கைதானவர்களில் அவசியம் கருதி தேவையானவர்களை மட்டும் உரிய காலத்திற்குள் பொலிஸ்  காவலில் எடுக்க சி.பி.ஐ. அல்லது சி.பி.சி.ஐ.டி.நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன்  விசாரணையின் தற்போதைய நிலை குறித்து சி.பி.சி.ஐ.டி தரப்பில் ‘சீல்’ இட்ட உறையில் வைத்து ஜூலை 28ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதேவேளை துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தனர்.

இது குறித்த வழக்கினை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அமர்வு தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இதனைதொடர்ந்து குறித்த வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts