கொவிட்-19 தொற்றினால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை..!!

உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12 மில்லியனை கடந்தது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, இதுவரை 1 கோடியே 23 இலட்சத்து 87 ஆயிரத்து 828பேர் பாதிப்படைந்துள்ளனர்.

இதுதவிர கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால், 5 இலட்சத்து 57ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 71 இலட்சத்து 87ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொவிட்-19 வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

உலகிலேயே கொரோனா வைரஸ் தொற்றினால் மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொண்ட நாடாக அமெரிக்கா விளங்குகின்றது.

அங்கு, 32 இலட்சத்து 19 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். 1 இலட்சத்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவிற்கு அடுத்தப்படியாக இந்தப் பட்டியலில், பிரேஸில், இந்தியா, ரஷ்யா மற்றும் பெரு ஆகிய நாடுகள் உள்ளன.

Related posts