உரிமை கோருவதை இந்தியா ஒப்புக் கொண்டது..!!

மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு உரிமை கோருவதை இந்தியா ஒப்புக் கொண்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கேகாலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய பிரதமர், கடந்த அரசாங்கத்தில் அரச வளங்களை அபிவிருத்தி செய்வதற்குப் பதிலாக விற்பனை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டினார்.

2015 க்கு முன்னர் இருந்த அரசாங்கம் துறைமுகத்தை உருவாக்கியது, கடந்த அரசாங்கம் அதை விற்றது என்றும் இருப்பினும் அப்போதைய அரசாங்கத்தினால் விமான நிலையத்தை விற்க முடியவில்லை என சுட்டிக்காட்டிய பிரதமர் அத்தகைய நடவடிக்கையைத் தடுக்கும் சட்டங்கள் இருந்தன என்றும் குறிப்பிட்டார்.

அண்மையில் இந்தியா சென்றிருந்த தான், மத்தள சர்வதேச விமான நிலையம் நாட்டின் இரண்டாவது விமான நிலையம் என்பதனால் அதை வாங்க வேண்டாம் என இந்தியாவிடம் கேட்டுக்கொண்டதாக கூறினார்.

இதனை அடுத்து குறித்த கோரிக்கையை இந்தியா பரிசீலித்ததாகவும் இதன் பின்னர் விமான நிலையம் காப்பாற்றப்பட்டது என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Related posts