உத்தரப்பிரதேசத்தில் இன்று முதல் முழு ஊரடங்கு ..!!

உத்தரப்பிரதேசத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் எதிர்வரும் 13 ஆம் திகதிவரை முழுநேர ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் 13 ஆம் திகதி காலை 5 மணிவரை குறித்த ஊரடங்கு அமுலில் இருக்கும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

குறித்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த பிற தேவைகளுக்கான அனைத்து போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளதுடன், அரசு அலுவலகங்கள், கடைகள் மற்றும் சந்தைகளும் மூடப்பட்டுள்ளதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தை பொறுத்தவரையில் கடந்த 24 மணிநேரத்தில் 1248 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி தற்போவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts