அச்சுறுத்தி இழுத்துச் சென்ற காவற்துறை பரிசோதகர்..!!

காவற்துறை பரிசோதகர் நியோமல் ரங்ஜீவ இன்று கொழும்பு மேல் நீதிமன்ற , வளாகத்தில் ஊடகவியலாளர் ஒருவரை அச்சுறுத்தி இழுத்துச் சென்று நீதிமன்ற காவற்துறையிடம் ஒப்படைத்துள்ளார்.

தான் ஊடகவியலாளர் என்று தன்னை அடையாளப்படுத்திய போது இவ்வாறு காவற்துறை பரிசோதகர் செயற்பட்டதாக ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.

காவற்துறை சாவடியில் வைத்து தனது கெமராவில் இருந்த மெமரி சிப்யினை   {  memory chip } கெமராவில் இருந்து எடுத்து கொண்டதாக ஊடகவியலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் , பணி நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட காவற்துறை போதை பொருள் பிரிவு காவற்துறை பரிசோதகரே இவ்வாறு செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts