வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களுக்கு ஜனாதிபதியிடம் இருந்து ஓர் நற்செய்தி…!

வெளிநாடுகளில் தொழில் புறியும் இலங்கையர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்களுக்கு ஜனாதிபதியிடம் இருந்து ஓர் விசேட செய்தி கிடைக்கப்பெற்றுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் தங்கியிருந்த இலங்கையர்கள் திரும்பவும் நாட்டுக்குள் அழைத்து வரப்பட்டனர்.

இவர்கள் உள்நாட்டில் சுய தொழிலில் ஈடுப்படுவதற்கான அனைத்து வசதிகளும் வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற நிக்ழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதேபோல்,கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் முன்னெடுத்து வரும் திட்டங்கள் பாராட்டத்தக்கது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட சேவைகள் தற்சமயம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கையின் சேவைகளும்கள் இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடு சென்றுள்ள இலங்கையர்கள் மீண்டும் நாடு திரும்பி நாட்டில் தமக்கு விருப்பமான தொழிலில் ஈடுப்பட அரசாங்கத்தால் முடிந்த உதவிகள் செய்து தரப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Related posts