தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள செய்தி..!

அரசியல் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாகனங்களை தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்ப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மீண்டும் விலியுறுத்தியுள்ளது.

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வாகனத்தை தனியார் நடவடிக்கைகளுக்காக பயன்ப்படுத்துவது சட்ட விரோதமான செயலாக கருதப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் வேட்பாளர்களின் பதவி துஷ்பிரயோகம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று அவை நிரூபிக்கப்பட்டால் கட்டாயம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Related posts