சங்குப்பிட்டி பாலமருகே டிப்பர்-ஓட்டோ மோதி விபத்து…!!

சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகாமையில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் சிக்கி கிளிநொச்சியை சேர்ந்த இளைஞர்கள் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சங்குபிட்டி பாலத்திற்கு அருகாமையில் இன்று பி.பகல் 7.45 மணியளவில் டிப்பரும் ஓட்டோவும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் ஓட்டோவில் பயணித்த கிளிநொச்சியை சேர்ந்த 3 இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்தில் ஆனந்தபுரம் கிளிநொச்சியைச் சேர்ந்த செல்வகுமார் (வயது-24), பிரியதர்சன் (வயது-25) மற்றும் கிளிநொச்சியை சேர்ந்த த.டர்சிகன் (வயது-22) ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர்.

Related posts