உலகளவில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை….!!

உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 மில்லியனை கடந்தது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, இதுவரை 70 இலட்சத்து 69ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

இதேபோல, வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 21 இலட்சத்து 66ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர்.

மேலும், கொடிய கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால், 5 இலட்சத்து 52ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

உலகிலேயே கொரோனா வைரஸ் தொற்றினால் மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொண்ட நாடாக அமெரிக்கா விளங்குகின்றது.

அங்கு, 31 இலட்சத்து 58 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். 1 இலட்சத்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவிற்கு அடுத்தப்படியாக இந்தப் பட்டியலில், பிரேஸில், இந்தியா, ரஷ்யா மற்றும் பெரு ஆகிய நாடுகள் உள்ளன.

Related posts