யாழ். மாவட்ட அதிகாரி மீது வாள்வெட்டு தாக்குதல்..!!

யாழ். மாவட்ட சுற்றுச்சூழல் திணைக்களத்தின் அதிகாரி, இன்று (08) காலை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக தாக்கப்பட்டுள்ளார்.

இரண்டு மோட்டர்சைக்கிள்களில் குறித்த அதிகாரியை பின்தொடரந்து சென்ற தரப்பினர் அவரை வாளால் வெட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்த சுற்றுச்சூழல் திணைக்கள அதிகாரி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை 8.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் யாழ். தலைமையக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts