மல்லாகம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவிப்பு..!!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை இன்றைய தினம் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மல்லாகம் நீதவான் நீதிமன்ற பதிவாளரினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நாளைய தினம் மானிப்பாய் நவாலி தேவாலயத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த உள்ளதாகவும், அந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக பொதுமக்களது பாதுகாப்பிற்கும், அமைதிக்கு குத்தகம் விளைவதுடன், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை மீள் உருவாக்கம் செய்வதற்க முற்படுவதாகவும் காவல்துறையினர் அறிக்கையிட்டுள்ளனர்.

அத்துடன், கொவிட்-19 தடுப்புச் சட்ட விதிகளுக்கும், நோய்த் தடுப்பு தனிமைப்படத்தல் சட்ட ஏற்பாடுகளுக்கும் முரணாக தாங்கள் செயற்பட உள்ளதாக தெரிவித்து, அந்த ஆர்ப்பாட்டத்தை தடை செய்யுமாறு காவல்துறையினர் விண்ணப்பித்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

எனவே, இந்த விடயம் தொடர்பாக கட்டளை வழங்குவதற்கு முன்னர், தங்கள் தரப்பின் விளக்கத்தை அல்லது வாதத்தை செவிமடுக்க நீதிமன்றம் உத்தேசித்துள்ளதால், தங்கள் தரப்பு வாதத்தை, இன்றைய தினம் நண்பகல் 12 மணிக்கு நீதிமன்றில் தோன்றி முன்வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டு மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts