பிரேஸில் ஜனாதிபதி பொல்சனாரோவுக்கு கொரோனா தொற்று ..!!

பிரெஸிலில் கொரோனா வைரஸ் அதி தீவிரமாகப் பரவியுள்ள நிலையில் அந்நாட்டு ஜனாதிபதி ஜெய்ர் பொல்சனாரோவுக்கு (Jair Bolsonaro) கொரோனா தொற்று உள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவருக்கு சாதாரண அறிகுறி இருப்பதாகவும் உடல் நலம் சாதாரணமாக உள்ளதாகவும் ஜனாதிபதி மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.

நாட்டில் சமூக விலகல் தேவையில்லை எனவும் முகக் கவசம் பயன்படுத்தத் தேவையில்லை என்றும் மக்களிடம் பொல்சனாரோ கூறிவந்தார்.

மக்கள் முடக்க நிலையில் இருந்தால் கொரோனா பாதிப்பைவிட பொருளாதாரப் பாதிப்பு பல மடங்காக இருக்கும் என்று தெரிவித்து மக்களை வழமைபோல் செயற்படுவதற்கு அனுமதித்தார்.

அத்துடன், தானும் சமூக விலகலைப் பின்பற்றாமலும் முகக்கவசம் அணியாமலும் பொது இடங்களுக்குச் சென்றுவந்த நிலையில் அந்நாட்டு நீதிமன்றத்தின் கண்டனத்தை அடுத்து முகக்கவம் அணிந்துவருகிறார்.

இந்நிலையிலேயே, பொல்சனாரோவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரேஸிலில் முடக்கநிலை சரியாகப் பின்பற்றப்படாத நிலையில் தற்போது வைரஸின் தீவிர பரவலுக்கு அந்நாடு முகங்கொடுத்துள்ளது.

உலக அளவில் அமெரிக்காவை அடுத்து பாதிப்பில் உச்ச அளவில் உள்ள பிரேஸிலில் இதுவரை 16 இலட்சத்து 43 ஆயிரத்து 500 பேருக்கு மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட நிலையில் தற்போதுவரை 66ஆயிரம் பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts