சமர்ப்பிக்கப்படவுள்ள மின்கட்டணம் குறித்து ஆராயும் விசே குழுவின் அறிக்கை..!!

கொவிட் 19 ஊரடங்கு உத்தரவு காலப்பகுதியில் மின் கட்டணங்கள் அதிகரித்துள்ளதாக பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை தொடர்ந்து இது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டிருந்த குழுவின் அறிக்கை இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

குறித்த குழுவின் தலைவராக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் மேலதிக செயலாளர் ஹேமந்த சமரகோன் விளங்குகிறார்.

இக்குழுவின் அறிக்கையானது நேற்றைய தினம் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts