கைதுசெய்யப்பட்ட 13 அதிகாரிகளுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு..!!

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 13 அதிகாரிகளும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களில் நேற்றைய தினம் கைதான காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவரும் அடங்குவதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன

Related posts