கிளிநொச்சி வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த நபர் சாவு..!!

கடந்த 3 ம் திகதி கிளிநொச்சி வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளிற்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். இந்த நிலையில் இன்று காலை குறித்த நபர் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த வெடிப்பு சம்பவம் தொடர்பில் உயிரிழந்த நபர் மற்றும் அவரது மனைவியான பெண் ஆசிரியையும் மற்றுமொரு குடும்பஸ்தரும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிhடத்தக்கது.

Related posts