இரட்டைக் குட்டிகளை ஈன்ற யானை இலங்கையில் இதுவே முதல் பதிவு..!!

யானைகள் பெரும்பாலும் ஒரு குட்டியையே ஈனும். அரிதாகவே அவை இரட்டைக் குட்டிகளை ஈனும்.

இலங்கை வரலாற்றில் பதிவான தகவல்களின் பிரகாரம் யானை ஒன்று இரட்டைக் குட்டிகளை ஈன்றுள்ளமை இது முதலாவது சந்தா்ப்பமாகும் என வனவிலங்கு பாதுகாப்புத் துறை பணிப்பாளா் நாயகம் டாக்டர் தரக பிரசாத் தெரிவித்துள்ளார்.

அவதானிப்பின் படி இந்த இரட்டை யானைக் குட்டிகளின் வயது மூன்று முதல் நான்கு வாரங்கள் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

‌‌பெண் யானை 15 வயதில் கர்ப்பம் தரித்து 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு குட்டி ஈனும். அதன் கர்ப்பகாலம் 20 மாதங்களாகும். குட்டி பிறந்தவுடன் உடனடியாக ஆணா? அல்லது பெண்ணா? என கண்டுபிடிக்க முடியாது. அது 6 மாதம் பாலினத்தை இனம் காண முடியும் என விலங்குகள் துறைசாா் நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

பெண் யானை ஒன்று அதன் ஆயுட்காலத்தில் 13 முறை குட்டிகளை ஈனக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts