8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் நிலை கவலைக்கிடம்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஏழு இலட்சத்தை கடந்துள்ளது.

இதன்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22 ஆயிரத்து 510 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ள நிலையில், மொத்தமாக 7 இலட்சத்து 20 ஆயிரத்து 346 பேர் குறித்த வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

அத்துடன் புதிதாக 474 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்து 174 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 4 இலட்சத்து 40 ஆயிரத்து 150 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன், 2 இலட்சத்து 60 ஆயிரத்து 22 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts