200 கிராம் கேரளா கஞ்சாவுடன் பெண்ணொருவர் கைது..!!

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த பெண்ணொருவரை 200 கிராம் கேரளா கஞ்சாவுடன் நேற்றிரவு (6) கைது செய்துள்ளதாக கந்தளாய் போதைப்பொருள் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கோவில் கிராமம், கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய பெண்ணொருவரே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சிறைச்சாலையில் எட்டு மாதம் சிறைவாசம் அனுபவித்து விட்டு வெளியில் வந்த நிலையில் மீண்டும் கஞ்சா போதைப்பொருள் விற்ற நிலையிலே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
போதைப்பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் 200 கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபரை தடுத்து வைத்துள்ளதோடு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts