வேட்பாளர் சட்டத்தரணி றிபான் உரை

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் இடுகின்ற புள்ளடி; ஊழழுக்கு எதிராக விரல் நுனிகளினால் செய்யப்படுகின்ற ஒரு புரட்சியாக இருக்க வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்த்தில் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசில் போட்டியிடும் சட்டத்தரணி ஹபீப் றிபான் தெரிவித்தார்.

????????????????????????????????????

மீறாவோடை அந் நூர் மண்டபத்தில் பெண்களுக்கான தேர்தல் பிரச்சார கூட்டம் எஸ்.எம்;.நவ்பர் தலைமையில் இடம் பெற்ற போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.

????????????????????????????????????

இந்த கல்குடா மண்னுக்கு நான் நேர்மையான பண்பான ஊழல் அற்ற ஒரு தலைவனாக உங்களை வழி நடாத்த தயாராக இருக்கின்றேன் நீங்கள் இடுகின்ற வாக்கு போடுகின்ற புள்ளடி உங்கள் விரல் நுனிகலாள் செய்யப்படுகின்ற ஒரு புரட்சியாக இருக்க வேண்டும் அந்த புரட்சி உங்கள் பிள்ளைகளுக்கும் உங்கள் பின்னால் வருகின்ற சந்ததிகளுக்கும் நல்ல சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

????????????????????????????????????

இந்தப் பிரதேசத்தில் பதினேழு வருடங்களாக அரசியலில் இருக்கின்றார் எத்தனை பேருக்கு பதவிகள் கொடுத்திருக்கிறார் அவர் ஒரு கட்சியின் தவிசாளர் அவரது கட்சியின் தலைவர் அமைச்சுப் பதவி வகித்த போது அந்த அமைச்சின் கீழ் நாட்பத்தெட்டு திணைக்களங்கள் இருந்தன அதில் ஏதாவது ஒரு திணைக்களத்தில் எமது பிரதேசத்தில் இருந்த ஒருவருக்கு பதவிகள் கொடுத்தார்களா இல்லை களுவாஞ்சிக்குடியில் இருப்பவர்களுக்கும் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்குமே அப்பதவிகளை வழங்குவதற்கு தனது சிபார்சுகளை செய்தார் அவருக்கு நமது பகுதியில் வாக்கள் மாத்திரம்தான் தேவை எமது பிரதேசத்தைப் பற்றியோ எமது மக்களைப்பற்றியோ அவருக்கு அக்கரை கிடையாது என்றும் தெரிவித்தார்.

Related posts