விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சொன்னததால்தான் நான் அரசுடன் இணைந்தேன்!

முள்ளிவாய்க்காலில் இறுதி நேரத்தில் மக்கள் வெளியேறும்   போது அன்று இருந்த விடுதலைப்புலிகளின் தலைவர்கள் இன்று அவர்கள் இல்லை அவர்கள் என்னிடம் சொன்னார்கள் இனி போராட்டம் சரிவராது இந்த அரசுடன் இணைந்து மக்களுக்கு உதவிசெய்யுங்கள் மக்களின் அபிவிருத்தியினை முன்னெடுங்கள் என்று சொன்னார்கள் அந்த ஒரு சொல்லுதான் எனது அடி நெஞ்சில் இப்பொழுதும்  இருக்கின்றது இந்த உண்மையினை இன்று சொல்கின்றேன். என  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர் முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம்   தெரிவித்துள்ளார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர் முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம் 06.07.2020 அன்று முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்

போராட்ட கால கட்டத்தில் என்னை மக்கள் ஆதரித்து எனக்காக வாக்களித்தார்கள்,அன்று இருந்த சந்தர்பத்தினை மறக்க முடியாது மகிந்த ராஜபக்க அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு காரணமாக இருந்த தகவலையும் வெளியிட்டுள்ளார்.

முள்ளிவாய்க்காலில் இறுதி நேரத்தில் மக்கள் வெளியேறும்   போது அன்று இருந்த விடுதலைப்புலிகளின் தலைவர்கள் இன்று அவர்கள் இல்லை அவர்கள் என்னிடம் சொன்னார்கள் இனி போராட்டம் சரிவராது இந்த அரசுடன் இணைந்து மக்களுக்கு உதவிசெய்யுங்கள் மக்களின் அபிவிருத்தியினை முன்னெடுங்கள் என்று சொன்னார்கள் அந்த ஒரு சொல்லுதான் எனது அடி நெஞ்சில் இப்பொழுது இருக்கின்றது இந்த உண்மையினை இன்று சொல்கின்றேன்.

இதனை மனதில் வைத்துத்தான் அரசுடன் சேர்ந்தேன் அந்த காலத்தில் மகிந்த ராஜபக்சவின் இணைப்பாளராக பணி செய்தேன் அவர்கள் பாதுகாப்பில் இருந்து எல்லாம் செய்தார்கள் அந்த காலகட்டத்தில் தான் கொஞ்ச இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு பெற்றுக்கொடுத்தோம்.

எங்கோ போன வேலைவாய்ப்பினை நான் தட்டிப்பறித்து எடுத்து கொடுக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது அன்று அமைச்சராக றிசாட் பதியூதீன் இருந்தார் அவர் அரசாங்கத்தின் அமைச்சர் நான் அரசாங்கத்தின் பிரதிநிதி நான் சண்டைபிடித்து சமுர்த்தி,கிராமசேவை,பட்டதாரிகள் உத்தியோகங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

அன்றைய காலகட்டத்தில் சிலருக்கு வேலைவாய்ப்பினை கொடுக்கமுடியாமல் போனது எங்கள் மக்களுக்கான வேலைவாய்ப்பினை குறைத்து தங்கள் இனத்தவர்களுக்கு வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுக்க செயற்பட்டார்கள். இதனால் எங்கள் மக்களுக்கான வேலைவாய்ப்பு குறைக்கப்பட்டது.

அன்று நான் முடிவெடுத்தேன் தனியாக நின்று அரசியலுக்குள் சென்றுதான் எங்கள் மக்களை காப்பாற்றவேண்டும் அது இன்று பலித்துள்ளது இதற்கு மக்கள் முழு ஆதரவு தரவேண்டும்.
வன்னி மாவட்டத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்கவேண்டும் அவர் அரசுடன் நிக்கும் தமிழராக இருக்கவேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்.

போராட்டத்திற்கு பின்னர் வன்னிமக்கள் கடும் வறுமையில் இருக்கின்றார்கள் வறுமையினை போக்குவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது அதனை எதிர்வரும் ஆகஸ்ட் 05 ஆம் திகதி எடுத்து காட்டுங்கள்.

வன்னிமாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் காணிப்பிரசனை, வீட்டுப்பிரச்சனை, போரால் வலுஇழந்தவர்கள், முன்னால் போராளிகள் என்று வாழ்ந்து வருகின்றார்கள் இந்த மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டும்.

இறுதிவரையும் மக்களுடன் மக்களாக வாழ்ந்து மக்ளோடு வெளியேறி எட்டு மாதங்கள் சிறையில் இருந்தேன் நான் செய்த தவறு மக்களோடு மக்களாக நின்றதுதான் தவறு இதனை எல்லாம் ஏற்றுக்கொண்டு இன்று ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது அதனை பயன்படுத்துவதற்காகவே நான் மக்களிடம் வந்துள்ளேன்.
நாங்கள் இருபதாயிரத்திற்கு மேற்பட்ட வாக்கு வன்னியில் எடுப்போமாக இருந்தால் இந்தமக்கள் சொல்கின்றார்கள் இதைசெய்யுங்கள் என்று அரசிடம் நாங்கள் கேட்கலாம் இந்த அரசாங்கம் கட்டாயம் அதனை செய்யும்.

மகிந்தராஜபக்ச காலத்தில் நடைபெற்ற வேலைத்திட்டத்தினை சிந்தித்து பாருங்கள் கடந்த ஜந்து ஆண்டு ஆட்சியில் நடந்த வேலைத்திட்டத்தினையும் ஒப்பிட்டு பாருங்கள் வன்னி மாவட்டத்தில் உள்ள மக்களின் தேவைகளை அரசிடம் கேட்டு பெற்றுத்தர என்னால் முடியும்.

முன்னார் யாருக்கும் பின்னால் சென்று  பின்கதவால் நின்றுதான் சில விடையங்களை செய்யவேண்டி இருந்தது இப்போது முன்கதவால் சென்று மகிந்தராஜபக்சவோ, பசில்ராஜபக்சவோ, கேட்டபாயராஜபக்சவையோ நேரில் சென்று சந்தித்து கதைத்து பெறக்கூடிய சந்தர்ப்பம் இப்பொழுது இருக்கின்றது அந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி மக்களுக்கான தேவைகளை நிவர்த்தி செய்யமுடியும்.

தந்தைசெல்வா காலத்தில் தீர்க்கதரிசனமான நல்ல அரசியல் இருந்தது  அதன் பின்னர் பிரபாகரன் காலத்தில் ஒரு அரசியல் இருந்து அதன் பின்னர் கடந்த பத்து ஆண்டுகள் சம்மந்தன் ஜயா தலையில் கொடுத்தோம் ஆனால் பத்து ஆண்டுகளாக எவும் நடக்கவில்லை  அவர்களால் இயலாது அவர்கள் சோரம்போய்விட்டார்கள்.

கடந்த ஆண்டு பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மகிந்தராஜபக்ச அவர்களுக்கு பிரதமர் பதவி கொடுத்து அதில் செயற்படும் படி சம்மந்தன் ஜயாவிடம் அன்றைய ஜனாதிபதி அவர்கள் கேட்டிருந்தார் அவர்கள் யு.என்.பியுடன் நிக்கப்போகின்றோம் என்றார்கள் அன்று அவர்கள் நிதானமாக நல்ல மக்களுக்கு உழைக்கும்  நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தால் எந்த அரசாங்கத்துடனாவது பேரம் பேசி இருக்கலாம் சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடுங்கள் என்று அந்த வேலையினை மாத்திரம் செய்திருந்தால் மக்கள் அவர்களை பேசமாட்டார்கள்.

இதேபோன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கான வேலைவாய்ப்புக்கள் அபிவிருத்தியினை செய்யுங்கள் என்று ஒப்பந்தம் பேசி செய்திருக்கலாம் இவர்கள் எதுவும் பேசவில்லை எதுவும் செய்யவில்லை யு.என்.பியுடன் சார்ந்து நின்று பணத்தினை வாங்கி பொக்கற்றுக்குள் வைத்து தங்கள் சுகபோகங்களi அனுபவித்தார்கள்.

கடந்த பத்து ஆண்டுகளாக எதுவும் செய்யாதவர்கள் மீண்டும் வந்து செய்வார்கள் என்று யார் நம்புவது இருக்கின்ற அரசுடன் இணைந்து மக்களுக்கான அபிவிருத்தியினை செய்வதே தவிர வேறு யாருக்கும் சந்தர்பம் கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Related posts