முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி..!!

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி நாளை ஆரம்பமாகவுள்ளது.

உகலாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்று பரவலுடன் அனைத்து கிரிக்கட் போட்டிகளும் இடைநிறுத்தப்பட்டன.

இந்த நிலையில் சுமார் 4 மாதங்களுக்கு பின்னர் நாளை ஆரம்பமாக உள்ள குறித்த போட்டி உலகலாவிய ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக மேற்கிந்திய தீவுகள் அணி இங்கிலாந்துக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளைய தினம் சவுதம்டனில் ஆரம்பமாகவுள்ளது.

எனினும் இந்த போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படாததுடன் சுகாதார வழிமுறைகளுக்கு அமைய குறித்த போட்டி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts