சக்தி வாய்ந்த நாடாளுமன்றம் ஒன்றை உருவாக்கிக் கொடுக்கவும்- ஜனாதிபதி..!!

நாடு எதிர்கொள்ளும் சவால்களை சமாளித்துச் செல்வதற்கு ஒரு சக்திவாய்ந்த நாடாளுமன்றத்தை உருவாக்கிக் கொடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

புத்தளம் மாவட்டத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

போதைப்பொருள் பாவனையை நாட்டிலிருந்து இல்லாதொழிப்பதற்கு ஜனாதிபதி முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களுக்கு பொதுமக்கள் இதன்போது பாராட்டுக்களை வெளியிட்டனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி சார்பில் இம்முறை புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் நோக்கில் அங்கு ஏற்பாடு செய்திருந்த பல்வேறு மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டிருந்தார்.

அதன்படி, நேற்று பிற்பகல் வேளையில் புத்தளம்-பங்கதெணிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் அவர் கலந்துக்கொண்டிருந்தார்.

இதன்போது ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் மாதம்பே பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலும் கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது 84 வயதுடைய எம்.எ.எச்.பீ மாரசிங்க என்ற ஆசிரியையினால் கொவிட் 19 வைரஸ் பரவல் ஒழிப்புக்காக 2 இலட்சம் ரூபாய் வழங்கிவைக்கப்பட்டது.

இதன் பின்னர் புத்தளம்-முதுகடுவ உடற்பயிற்சி நிலையத்திற்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பிலும் கலந்துகொண்டிருந்தார்.

மேலும், மகத்தான வரவேற்புக்கு மத்தியல் தங்கொடுவ நகரத்தில் மற்றுமொரு மக்கள் சந்திப்பும் இடம்பெற்றது.

Related posts