கூரிய ஆயுதங்களுடன் நடமாடிய ஏழு பேர் வரணியில் இராணுவத்திடம் சிக்கினர்..!!

யாழ்ப்பாணம் தென்மராட்சி வரணி பகுதியில் கூரிய ஆயுதங்களுடன் நள்ளிரவில் நடமாடிய ஏழு பேரை இராணுவத்தினர் பிடித்து கொடிகாமம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
வரணி பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் கடந்த நள்ளிரவு ஐந்து மோட்டார் சைக்கிள்களில் பயணித்த ஏழு பேரை வழிமறித்து சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
அவர்களிடம் வாள்கள், கோடரி, கொட்டன் தடிகள் என்பன காணப்பட்ட நிலையில் அவர்களை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்திருக்கின்றனர்.
இன்று அவர்கள் ஏழு பேர் சாவகச்சேரி நீதிமன்றில் முற்படுத்தப்படுவர் என்று கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Related posts