ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி இடம்பெறும்..!!

இங்கிலாந்திற்கான பாக்கிஸ்தானிய கிரிக்கட் அணியின் சுற்றுப்பயணம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி இடம்பெறும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பயணத்தின் போது இரு அணிகளுக்கும் இடையே மூன்று டெஸ்ட் போட்டிகளும் 3 இருபதுக்கு இருபது போட்டிகளும் இடம்பெறும் என இங்கிலாந்து கிரிக்கட் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கமைய, இங்கிலாந்திற்கான பாக்கிஸ்தானிய கிரிக்கட் அணியின் சுற்றுப்பயணம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இடம்பெறும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த போட்டித் தொடருக்கு முன்னர் இங்கிலாந்து அணி அயலாந்து அணியுடன் மூன்று ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகள் சதம்டனில் இந்த மாதம் 30 ஆம் திகதியும், ஓகஸ்ட் 1 மற்றும் 4 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

Related posts