அமெரிக்காவில் வேகமாக பரவும் கொரோனா..!!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை மூன்று மில்லியனை கடந்துள்ளது. அமெரிக்காவில் கடந்த கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 49 ஆயிரத்து 455 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அமெரிக்காவில் மாத்திரம் இதுவரையில் 30 இலட்சத்து 39 ஆயிரத்து 702 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் இந்த வைரஸ் தொற்று காரணமாக அங்கு 1 இலட்சத்து 32 ஆயிரத்து 961 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரம் கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் தீவிரமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22 ஆயிரத்து 510 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது. அத்துடன் அங்கு இதுவரையில் 7 இலட்சத்து 20 ஆயிரத்து 346 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது. இதேவேளை, சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 17 இலட்சத்து 31 ஆயிரத்து 619 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் இந்த வைரஸ் தாக்கம் காரணமாக உலகளாவிய ரீதியில் 5 இலட்சத்து 40 ஆயிரத்து 116 பேர் உயிரிழந்துள்ளனர் எவ்வாறாயினும், 66 இலட்சத்து 23 ஆயிரத்து 119 பேர் இந்த வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts