பாகிஸ்தானிடம் இந்திய அணி தோல்வி அடைந்தது இல்லை..!!

இந்திய அணிக்கு எதிரான போட்டிகளில், பல முறை பாகிஸ்தான் அணி அவர்களை அடித்து துவம் செய்துள்ளது என்று அந்நாட்டு அணியின் முன்னாள் வீரர் சயித் அப்ரீடி கூறியுள்ளார்.

பொதுவாக தற்போது இருக்கும் ரசிகர்கள் பலருக்கும் இந்தியாவிடம், பாகிஸ்தான் முக்கிய தொடர்களில் தொடர்ந்து அடி வாங்கி வருகிறது என்பது பலருக்கும் தெரியும்.

கடந்த 2000-ஆம் ஆண்டுகளில் இந்திய அணிக்கு கங்குலி தலைவர் ஆன பின்பு, அந்தணியை அதிக போட்டிகளில் இந்தியா வீழ்த்தியுள்ளது.

குறிப்பாக ஐ.சி.சி நடத்தும் உலக கோப்பை தொடரில் பாகிஸ்தானிடம் இந்திய அணி தோல்வி அடைந்தது இல்லை என்ற பெருமையையும் இந்திய அணிக்கு உள்ளது.

கங்குலி தலைமையிலான அணிதான் அதிக அளவில் வெற்றி குவிக்க ஆரம்பித்தது. அதன் பின்னர் டோனி, கோலி போன்றோர் அவரின் வழியை பின்பற்றி பாகிஸ்தானுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி அடுத்தடுத்து வெற்றியை குவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்ட முன்னாள் பாகிஸ்தான் வீரர் சயித் அப்ரிடி, இந்தியாவுக்கு எதிராக ஆடத்தான் எனக்கு மிகவும் பிடிக்கும்.

இந்திய அணியை பல முறை அடித்து துவம்சம் செய்து இருக்கிறோம். இந்தியாவுக்கு எதிராக விளையாடும் போது ரசித்து உற்சாகமாக ஆடுவேன். அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக ஆடும்போது அழுத்தம் இருக்கும்.

இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி 80-90-களில் அதிக வெற்றிகளைப் பெற்றுள்ளது. இந்திய அணியை பாக்கிஸ்தான் அணி பலமுறை எளிதாக வீழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related posts