பொலிவியா சுகாதார அமைச்சருக்கு கொரோனா வைரஸ் தொற்று..!!

பொலிவியாவின் சுகாதார அமைச்சர் மரியா ஈடி ரோகா கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. எனினும் அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும் அமைச்சு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் இதுவரை 38,000 போ் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 1,378 போ் உயிரிழந்துள்ளனா்.

பொலிவியாவில் தொற்று நோயின் ஆரம்பத்திலேயே சமூக முடக்கல்கள் அறிவிக்கப்பட்டன. எனினும் அண்மையில் கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்ட பின்னா் தொற்று நோய் பரவல் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் பொலிவியாவில் கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டம் இடைவிடாமல் தொடர்கிறது. பொலிவியர்களின் ஆரோக்கியத்திற்கான இந்த போரில் சுகாதார அமைச்சா் விரைவில் மீண்டும் இணைந்துகொள்வாா் என அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதி ஜீனைன் அனெஸ் தனது ருவிட்டரில் தெரிவித்துள்ளார்.

பொலிவியாவில் தொற்று நோய்க்கு மத்தியில் செப்டம்பர் 6 -ஆம் திகதி பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts