நீதிமன்றில் முன்னிலையாகவுள்ள குசல் மென்டிஸ்..!!

வாகன விபத்துக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் குசல் மெண்டிஸ் மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் இன்று பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். குறித்த விபத்தின் போது அவர் மதுபானம் அருந்தியிருந்தாரா என்பது தொடர்பில் கண்டறிவதற்காக அவரிடம் நேற்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. வடக்கு பாணந்துறை – ஹொரேதுடுவ பகுதியில் நேற்று அதிகாலை 5 மணியளவில் குசல் மொண்டிஸ் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். 64 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் குசல் மெண்டிஸ்  காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குசல் மெண்டிஸ் பயணித்த சிற்றூர்ந்தில் இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் அவிஸ்க்க பெர்ணாண்டோவும் உடன் இருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது

Related posts