வாரம் 3 முறை இத குடிச்சா மாயமாய் மறைஞ்சி போய்விடும் தொப்பை..!!

உலகில் எடை அதிகரிப்பால் ஏராளமான மக்கள் அவஸ்தைப்படுகின்றனர்.

ஒருவரது உடலில் சர்க்கரையின் அளவு அதிகமானால், அது கொழுப்புக்களாக உடலில் தேங்க ஆரம்பித்து, உடல் பருமனை உண்டாக்கும்.

உடல் பருமனுடன் சர்க்கரை நோயும் இருந்தால், அதை விட கொடுமை வேறு எதுவும் இருக்க முடியாது.

இக்கட்டுரையில் உயர் இரத்த சர்க்கரை மற்றும் உடல் பருமனைக் குறைக்க உதவும் ஓர் அற்புத பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்
  • கற்றாழை – 1 கொத்து
  • அன்னாசிப்பழம் – 2 துண்டுகள்
  • செலரி – சிறிது
  • ஆரஞ்சு ஜூஸ – 1 கப்
  • ஆளி விதை – 2 சிறிய ஸ்பூன்
  • பார்ஸ்லி – 1 கையளவு
செய்முறை

கற்றாழை, அன்னாசி போன்றவற்றை நன்கு கழுவி, தோலை நீக்கிவிட்டு துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு, அத்துடன் இதர பொருட்களையும் போட்டு நன்கு அரைத்துக் கொண்டால், பானம் தயார்.

குடிக்கும் நேரம்

இந்த பானத்தை தயாரித்த உடனேயே குடிக்க வேண்டும். இல்லாவிட்டால், அதை ஃப்ரிட்ஜில் வைத்து பின் குடிக்கலாம். வெளியே நீண்ட நேரம் இந்த பானம் இருந்தால், அது அந்த பானத்தில் உள்ள மருத்துவ குணத்தை இழக்கச் செய்துவிடும்.

முக்கியமாக இந்த பானத்தை வாரத்திற்கு மூன்று முறை, அதுவும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதே மிகவும் நல்லது.

குறிப்பு

இந்த பானத்தை குடிக்க ஆரம்பித்தால், நல்ல ஆரோக்கியமான டயட், தினமும் உடற்பயிற்சி மற்றும் 2 லிட்டர் நீரை தவறாமல் குடிக்க வேண்டும். மேலும் அவ்வப்போது மருத்துவரை அணுகி இரத்த சர்க்கரை அளவைக் கண்காணிக்கவும் வேண்டியது அவசியம்

Related posts