கொவிட்-19: பிரேஸிலில் 65 ஆயிரத்தை நெருங்கும் மொத்த உயிரிழப்பு..!!

பிரேஸிலில் அசுரவேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 65 ஆயிரத்தை நெருங்குகின்றது.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரேஸிலில் இதுவரை 64 ஆயிரத்து 900பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுதவிர, பிரேஸிலில் கொரோனா வைரஸ் தொற்றினால் 16 இலட்சத்து 4 ஆயிரத்து 585பேர் பாதிப்படைந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் பிரேஸிலில் 26,204பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 535பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், அங்கு கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 561,070பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 8,318பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதவிர, பிரேஸிலில் 9 இலட்சத்து 78 ஆயிரத்து 615பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

Related posts