கொரோனா காரணமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளினால் தேர்தல் பிரசாரத்துக்கு பாதிப்பு- துமிந்த..!!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளினால் தேர்தல் பிரசார நடவடிக்கைகள்  பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக துமிந்த சில்வா மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த காலங்களில் முன்னெடுத்ததைப் போன்று வழமையான தேர்தல் பிரசாரங்களை தற்போது முன்னெடுக்க முடியவில்லை.

இதற்கு காரணம் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலினால்  விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளே ஆகும்.

மேலும் குறித்த கட்டுப்பாடுகளினால் பாரிய கூட்டங்களை அபேட்சகர்களினால் நடத்த முடியாமல் இருக்கின்றது.

அத்துடன் சுவரொட்டிகள் மற்றும் பதாதைகள் ஆகியவற்றை காட்சிப்படுத்த முடியாமல் இருக்கின்றது” என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

Related posts