கொரோனாவிலிருந்து உயிர் பிழைத்த 106 வயது தாய்..!!

உலக உயிர் கொல்லி நோயான கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றினால் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி உயிரிழந்து வருகின்றனர்.

இதுவரை அதனை தடுப்பதற்கு மருத்துவம் இன்றி நாடுகள் தவிப்பில் ஆழ்ந்து கிடக்கின்றன.

ஆனால் பிரித்தானியாவில் வசித்து வரும் 106 வயதுடைய வயோதிப தாய் ஒருவர் கொரோனா நோயில் பாதிக்கப்பட்டு முழுமையாக குணமடைந்துள்ளார்.

இவர் தனது ஆறாவது வயதில் இதே போன்றதொரு நோயிலும் பாதிக்கப்பட்டிருந்துள்ளார்.

இந்நிலையில் இவருக்கு அண்மையில் கொரோனா தொற்று சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது 106 வயதுடைய குறித்த தாய்க்கு கொரோனா தொற்று காண்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சைகள் இன்றி கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்து வெளியேறியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts