குவைட் நாட்டின் அதிரடி..!!

குவைட் அரசு வெளிநாடு வாழ் மக்கள் எண்ணிக்கையை  குறைக்கும் குடியேற்ற ஒதுக்கீடு சட்ட மூலத்தினை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளதால் அதிகமான வெளிநாட்டு வாழ் மக்கள் வேண்டிய சூழலை எதிர்கொண்டுள்ளனர்

வளைகுடா நாடான குவைட்டில் 30 லட்சம் வெளிநாட்டினர் வசிக்கின்றனர்.

கடந்த சில மாதங்களாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிவு, கொரோனா வைரஸ் பாதிப்பு போன்றவற்றால் ஏராளமான வெளிநாட்டவர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் அங்கிருக்கும் நிறுவனங்களும் பெரும் சிக்கலில் இருக்கின்றன.

இதுமட்டுமல்லாமல் குவைட்டில்  வெளிநாட்டினருக்கு எதிரான மனநிலை அங்குள்ள அரசியல் தலைவர்கள் உயர் அதிகாரிகள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இதனால் வெளிநாட்டினர் எண்ணிக்கையை குறைக்கும் முடிவில் இறங்கியுள்ளார்கள் என்ற தகவல்களும் தெரிவிக்கின்றன

‘ எங்கள் நாட்டில் வசிக்கும் வெளிநாட்டினர் மக்கள் தொகையை 70 சதவீதத்திலுருந்து 30 சதவீதமாகக் குறைக்க திட்டமிட்டுள்ளோம்’ என  அந்நாட்டு பிரதமர் அண்மையில் தெரிவித்தார்.

இதையடுத்து வெளிநாட்டினர் மக்கள் தொகையை குறைக்கும் வகையில் குடியேற்ற ஒதுக்கீடு சட்ட மூலம் கொண்டுவரப்பட்டது.

இந்த மசோதாவுக்கு குவைட்டின் நடாளுமன்றமும் அனுமதி அளித்துள்ளது

Related posts