கிளிநொச்சியில் கோர விபத்து: ஒருவர் பலி..!!

கிளிநொச்சி பூகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பிராய் பகுதியில் நேற்று (05) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.  கிளிநொச்சி பூநகரி பரந்தன் வீதியில் தம்பிராய் பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. டிப்பர் வாகனத்துடன் உந்துருளி ஒன்று மோதுண்டதன் காரணமாக குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பூநகரி காவல்துறையினர் தெரிவித்தனர். இதன்போது உந்துருளிவாகனம் தீக்கிரையானது. அத்துடன் ரிப்பர் வாகனத்துடன் மோதுண்ட குறித்த உந்துருளி அந்த வீதியில் பயணித்த மற்றுமொரு உந்துருளியுடனும் மோதுண்டுள்ளது. இவ்விபத்தில், ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாக பூநகரி காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.  இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts